உள்ளூர் செய்திகள்
வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
- ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
- ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் படி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணிகளை, ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார பொருளாளர் வீரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், வட்டார துணை தலைவர் சங்கரன், வட்டார துணை செயலாளர் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமேகலை, வட்டார செயற்குழு உறுப்பினர் செல்வி உள்ளிட்ட வட்டார, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.