ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளர் சண்முகவேல் பேசிய போது எடுத்தபடம்.
28-ந் தேதி பிரேமலதா நெல்லை வருகை- மாவட்ட செயலாளர் தலைமையில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்
- தே.மு.தி.க. சார்பில் வருகிற 28-ந் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக சுமார் 30 வாகனங்களில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
நெல்லை:
தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அனுமதி பெற்ற அளவை விட பலமடங்கு மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக கூறி அதனை தடுக்க வலியுறுத்தியும் தே.மு.தி.க. சார்பில் வருகிற 28-ந் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் ஆணையின்படி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்குகிறார்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் பாளையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், வருகிற 28-ந் தேதி ஆலங்குளத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரும் கட்சி பொருளாளர் பிரேமலதாவுக்கு நெல்லை வண்ணார்பேட்டையில் வைத்து சிறப்பாக வரவேற்பு அளிப்பது எனவும், ஆலங்குளத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக சுமார் 30 வாகனங்களில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பாளை பகுதி செயலாளர் அந்தோணி, தச்சைப்பகுதி செயலாளர் ராஜ், மேலப்பாளையம் பகுதி செயலாளர் குதுப்புதீன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, சங்கர்நகர் பேரூர் செயலாளர் சின்னபாண்டி மற்றும் நிர்வாகிகள் கணேசன், மாசானம், ரெயின்போ சிவா, சுப்ரமணியன், தினகரன் ,சங்கர், லயன் முருகன், குப்புசாமி, இருதயராஜ், மலுங்குபக்கீர்பாவா, முரளி, முத்து, மாரியப்பன், சேக் மைதீன், சிந்தா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.