உள்ளூர் செய்திகள்

மாணவனின் தாயாரிடம் பிரேமலதா செல்போனில் பேசிய காட்சி. 

நாங்குநேரி அரிவாள் வெட்டு சம்பவத்தில் சிகிச்சை பெறும் மாணவனின் தாயாரிடம் பிரேமலதா செல்போனில் பேசி ஆறுதல்

Published On 2023-08-13 08:58 GMT   |   Update On 2023-08-13 08:58 GMT
  • சின்னத்துரை, சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை தே.மு.தி.க. நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
  • மாணவன், அவரது சகோதரி குறித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தே.மு.தி.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.

அப்போது கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செல்போன் மூலமாக, சிகிச்சை பெற்று வரும் மாணவரின் தாயாரிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாணவன், அவரது சகோதரி குறித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

மாநில நெசவாளர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைவாணன், பாளை பகுதி செயலாளர் அந்தோணி, தச்சை பகுதி செயலாளர் ராஜ், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, நிர்வாகிகள் கணேசன், மாசானம், மகேந்திரன், ராஜா, பாலாஜி உட்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News