உள்ளூர் செய்திகள்

வள்ளியூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-10-07 09:13 GMT   |   Update On 2023-10-07 09:13 GMT
  • நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
  • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் செயற் பொறியாளர் வளன்அரசு மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

வள்ளியூர்:

நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறியாளர் அலுவ லகத்தில் நடைபெற்றது. நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் செயற் பொறி யாளர் வளன்அரசு மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் பேசுகையில், நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை நாட்களில் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணியில் இருந்து மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்கு வதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் வனத்துறையுடன் இணைந்து தொடர் ஆய்வு பணிகளை நடத்தி வன விலங்குகளால் மின் பாதைகள் மற்றும் மின் கம்பங்கள் சேதமாகி இருந்தால் உடனடியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டார். வள்ளியூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News