உள்ளூர் செய்திகள்

ஆதவா அறக்கட்டளை நிர்வாகி பாலகுமரேசன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

மேலும் அச்சுறுத்தல் தொடர்வதால் ஆதவா அறக்கட்டளை நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்- தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை

Published On 2023-01-24 09:14 GMT   |   Update On 2023-01-24 09:14 GMT
  • கடந்த மாதம் 29-ந் தேதி ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் பாலகுமரேசனை தாக்கியது.
  • ஆறுமுகநேரியில் மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிரபல தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் பாலகுமரேசன். இவர் தனது அறக்கட்டளை மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 29-ந் தேதி ஒரு கும்பலால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை பெற்று அவர் தற்போது வீடு திரும்பி உள்ளார்.

இந்த நிலையில் பாலகுமரேசன் தனது அறக்கட்டளை பணி யாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளை தத்து எடுத்து ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி செலவை ஏற்று சமூக பணியாற்றி வருகிறோம். மேலும் பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறோம்.

ஆறுமுகநேரி பகுதியில் ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அந்தப் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் என்னை நேரில் வந்து மிரட்டி சென்றதுடன், எனது மாட்டு தொழுவத்தையும் தீ வைத்து எரித்து விட்டனர்.

இதுகுறித்து நான் கொடுத்த புகாரின் பெயரில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே வந்து எனது ஓட்டலுக்கே வந்து என்னை மிரட்டி சென்றார். நான் உடனடியாக ஆறுமுக நேரி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்து பாது காப்பு கேட்டேன். ஆனால் போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 29-ந் தேதி ஒரு கும்பல் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பி உள்ளேன்.

தொடர்ந்து எனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதால் போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். துப்பாக்கி வைப்பதற்கு லைசன்ஸ் வழங்க வேண்டும். என் மீது திட்டமிட்டே கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News