உள்ளூர் செய்திகள்
ரைஸ் மில்லில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
ரைஸ் மில்லில் போலீசார் 'திடீர்' ஆய்வு
- பூதலூர், மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரைஸ் மில்லில் திடீரென ஆய்வு செய்தார்.
- நெல் சரியான முறையில் அரவை செய்யப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
தஞ்சாவூர்:
தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவுப்படி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா,
தஞ்சை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் அறிவுறுத்தல்படி இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் தஞ்சை மாவட்டம் வல்லம், பூதலூர்,
மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரைஸ் மில்லில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல் சரியான முறையில் அரவை செய்யப்படுகிறதா? முறைகேடு ஏதும் நடைபெறுகிறதா? என ஆய்வு செய்தனர்.