உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட கிராமமக்களை படத்தில் காணலாம்.

ஏர்வாடி அருகே கோவில் விழா ஆர்ச்சை போலீசார் அகற்ற முயற்சி- கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2023-05-05 09:17 GMT   |   Update On 2023-05-05 09:17 GMT
  • நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற போலீசார் முயற்சி செய்தனர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் டி.எஸ்.பி. ராஜு பேச்சுவார்த்தை நடத்தினார்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தி னருக்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கொடைவிழா வருகிற 8-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி விழா கமிட்டினர் சார்பில் சிறும ளஞ்சி மெயின் ரோட்டில் அலங்கார விளக்கு ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற முயற்சி செய்தனர்.

இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ச்சை அகற்ற விடாமல் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து நாங்குநேரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று ஆர்ச் வைக்குமாறு போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News