உள்ளூர் செய்திகள்

பனை விதைகள் நடப்பட்டது

பனை விதைகள் நடும் பணி

Published On 2022-09-25 08:15 GMT   |   Update On 2022-09-25 08:15 GMT
  • 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு பனை விதை நடப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சியானது 6 கி.மீ தூரம் கடற்கரை கொண்ட கிராமமாகும். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் 2018ம் ஆண்டு வீசிய கஜாபுயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்த கடலோர கிராமம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது

அதனை தடுக்கும் வகையில் இயற்கை அரணாக விளங்கும் பனை மரத்தை அதிக அளவில் நட வேண்டும் என ஊராட்சி சார்பில் திட்டமிட்டு 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்க–ப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தார்

செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதை நடப்பட்டது இதன் மூலம் கிராமத்தை பெரிய அளவிலான பாதிப்பிலிருந்து காக்க முடியும் என தெரிவித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி வெற்றிச்செல்வன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா தமிழரசன், ஊராட்சி செயலர் ச.சீதா, வார்டு உறுப்பினர் செல்வம், செல்வி, கலாநிதி மக்கள் நல பணியாளர் செல்வி கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News