உள்ளூர் செய்திகள்

குழாய் மூலம் குடிநீர்,மத்திய மந்திரி வீரேந்திர குமார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 கிராம ஊராட்சிகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு: மத்திய மந்திரி தகவல்

Update: 2022-10-03 13:00 GMT
  • பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ்,11,308 வீடுகள் கட்ட அனுமதி.
  • கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கோவளம்:

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே முட்டுக்காட்டில் செயல்படுத்தப்படும் சமூக நீதி திட்டங்களின் செயலாக்கம் குறித்து மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திர குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அவர் பேசியதாவது:

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 151 கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தூய்மையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேலும் 208 கிராம ஊராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது.

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16, 265 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 11,308 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 8 ஆண்டுகளில் கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மதிய உணவு திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் அவ்வப்போது, கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News