உள்ளூர் செய்திகள்

யாகசாலை அமைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டம்

Published On 2022-11-11 14:10 IST   |   Update On 2022-11-11 14:10:00 IST
  • யாகசாலை அமைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 41-வது நாளாக தொடரும் போராட்டம்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்த திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பல்வேறு வகையான நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும், மனித உருவ பொம்மைக்கு பாடை கட்டி போராட்டம் நடத்தினார்கள். இந்தநிலையில் 41-வது நாளான நேற்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஐகோர்ட்டில் சாதகமாக தீர்ப்பு வேண்டி யாகசாலை அமைத்து பூஜைகளை நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்."

Tags:    

Similar News