உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் கோவில் உண்டியல் திருட்டு

Published On 2022-08-24 09:26 GMT   |   Update On 2022-08-24 09:26 GMT
  • பெரம்பலூர் புறநகர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் குடியிருப்பான தீரன் நகரில் அருள்சக்தி விநாயகர் கோவில் உள்ளது.
  • கோவில் வளாகத்தில் வைத்திருந்த உண்டியல் திருட்டு போயிருந்ததை பார்த்து திடுக்கிட்டார்.

பெரம்பலூர் புறநகர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் குடியிருப்பான தீரன் நகரில் அருள்சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெரம்பலூர் கம்பன் நகர் 2-வது தெருவைச்சேர்ந்த கார்த்திகேயன்(வயது 45) அர்ச்சகராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 20-ந் தேதி விநாயகர் கோவிலில் பூஜை முடிந்தபின்னர், கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று மாலை மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வைத்திருந்த உண்டியல் திருட்டு போயிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உடனடியாக கார்த்திகேயன் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை இதைத்தொடர்ந்து போலீசார் தீரன் நகருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருட்டுபோன உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News