உள்ளூர் செய்திகள்

அங்கனூர் கிராமத்தில் சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-04-21 12:06 IST   |   Update On 2023-04-21 12:06:00 IST
  • அங்கனூர் கிராமத்தில் சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
  • சின்னாற்றில் தரை பாலமாக இருந்த போது அடிக்கடி வரும் வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

அகரம்சீகூர்:

அகரம்சீகூர் அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்திற்கும், அங்கனூர் கிராமத்திற்கும் இடையே ஓடும் சின்னாற்றில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது.சின்னாற்றில் தரை பாலமாக இருந்த போது அடிக்கடி வரும் வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் தரைப் பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டி பொதுமக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களாக இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து பள்ளம் தெரிகிறது. இதனால் இந்த பகுதியில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்து விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் நெடுஞ்சாலைத்துறை உடனடியாக இந்த பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News