உள்ளூர் செய்திகள்

தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி

Published On 2023-10-10 06:31 GMT   |   Update On 2023-10-10 06:31 GMT
  • பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது
  • மாவட்ட கலெக்டர் கலெக்டர் கற்பகம் அழைப்பு

பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். அதிகபட்சம் 1.50 கோடிக்கு மிகாமல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News