உள்ளூர் செய்திகள்
பெருமாள் கோயிலில் கார்திகை தீப திருவிழா
- பெருமாள் கோயிலில் கார்திகை தீப திருவிழா நடைபெற்றது
- சுடலை கொளுத்தப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு கார்த்திகை தீப திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடந்தது. மூலவர், தாயார். ஆண்டாள் ஆகியோர் சன்னதி சொர்க்கவாசல் ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுரங்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சீவிராயன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கபனையை பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் சொல்லி பெருமாள் முன்னிலையில் சுடலை கொளுத்தப்பட்டது. சுவாமி பெருமாள் சுற்றி பக்தர்கள் நின்று கோவிந்தா, கோவிந்த என முழக்கமிட்டனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜதிலகம் ஏற்பாடு செய்திருந்தார்.