உள்ளூர் செய்திகள்

சிறப்பு குறைதீர் முகாம்களில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Published On 2022-12-11 14:30 IST   |   Update On 2022-12-11 14:30:00 IST
  • சிறப்பு குறைதீர் முகாம்களில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
  • நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்தது

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தன. இதில் பெரம்பலூர் தாலுகாவில் எளம்பலூரிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் தொண்டமாந்துறையிலும் (கிழக்கு), குன்னம் தாலுகாவில் புதுவேட்டக்குடியிலும், ஆலத்தூர் தாலுகாவில் மேலமாத்தூரிலும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன. முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 57 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News