உள்ளூர் செய்திகள்

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திட கோரிக்கை

Published On 2023-03-16 13:49 IST   |   Update On 2023-03-16 13:49:00 IST
  • இளம்பெண்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்

பெரம்பலூர்

பெரம்பலூரில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட இளம்பெண்கள் மாநாடு, சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரியா தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் வரவேற்றார். இதில் சங்கத்தின் மாநில பொருளாளர் பாரதி கலந்து கொண்டு சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பாலின சமத்துவத்தை வலியுறுத்த வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடி விசாரணையும், அதற்குரிய தண்டனைகளையும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்களில் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News