உள்ளூர் செய்திகள்

மாத்திரை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

தென்காசி அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்

Published On 2023-06-06 13:54 IST   |   Update On 2023-06-06 13:54:00 IST
  • மாத்திரைகள் வாங்குவதற்காக 3 கவுண்டர்கள் இயங்கி வருகிறது.
  • வயதானவர்கள் நீண்ட நேரம் நின்று மாத்திரை பெற சிரமம் அடைகின்றனர்.

தென்காசி:

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.அவர்களுக்கு மருத்து வர்கள் சார்பில் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் வாங்குவதற்காக 2 பொது கவுண்டர்கள், மாற்றுத்திறனாளி களுக்கென 1 கவுண்டர் என மொத்தம் 3 கவுண்டர்கள் இயங்கி வரும் நிலையில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வயதானவர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று மாத்திரை பெறுவதற்கு பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். நேற்று வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால் மாத்திரைகள் வாங்குவதற்கு நோயாளிகள் அதிகளவில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதில் வயதான மற்றும் சிறு குழந்தைகளுடன் வந்த பெண்கள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தரையில் அமர்ந்து இருந்தனர். எனவே நாளுக்கு நாள் நோயாளிகள் தென்காசி அரசு மருத்துவமனையை நாடி வரும் நிலையில் மாத்திரைகள் வழங்குவதற்கு கூடுதல் கவுண்டர்களை திறக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News