உள்ளூர் செய்திகள்

கடலூரில் இன்று காலை முதல் லேசான மழை பெய்ததால் பரபரப்பாக காணப்படும் பிரதான சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

கடலூர் பகுதியில் மழை குளிர்ந்த காற்று வீசுவதால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2023-06-18 07:33 GMT   |   Update On 2023-06-18 07:33 GMT
  • அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது.
  • மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடிந்து தற்போது வரை 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பகலில் 104 டிகிரி வெயிலும், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள மழையில் நனைந்து படியும், நடந்து சென்ற பொது மக்கள் குடை பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. அதே சமயத்தில் இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News