உள்ளூர் செய்திகள்

சாயப்பட்டறைக்கு வாடகைக்கு இடம் கொடுத்தால் அபராதம்

Published On 2023-04-23 07:37 GMT   |   Update On 2023-04-23 07:37 GMT
  • திருமணி முத்தாற்றில் சாயப்பட்டறை கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள், கலப்பதால் நுரை தள்ளிய நிலையில் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் செல்கிறது.
  • திருமணி முத்தாற்றில் கழிவு நீரை திறந்துவிடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்தும் வருகின்றனர்.

சேலம், ஏப்.23-

சேலம் திருமணி முத்தாற்றில் சாயப்பட்டறை கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள், கலப்பதால் நுரை தள்ளிய நிலையில் கொண்ட லாம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் செல்கிறது. இந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும், நிலத்தடி நீர் மாசு அடைந்து வருவதா கவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, திருமணி முத்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகை யில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். திருமணி முத்தாற்றில் கழிவு

நீரை திறந்துவிடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்பை துண்டித்தும் வருகின்றனர். இதைத்தவிர மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவு நீரை வெளியேற்றும் சாயப் பட்டறையை மூடி யும், மின் இணைப்பு துண்டிக்கப் பட்டும் வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் விதிமுறையை மீறி செயல்படும் சாயப்பட்ட றைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல், சாயப்பட்டறையின் கழிவு நீரை வெளியேற்றிய 30க்கும் மேற்பட்ட சாயப்பட்ட றைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறாத சாயப்பட்டறைக்கு வாட கைக்கு இடம் அளித்தால், அந்த உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும். அந்த உரிமையாளரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News