உள்ளூர் செய்திகள்

பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தல் - 4 பேர் மனுதாக்கல்

Published On 2022-06-28 08:20 GMT   |   Update On 2022-06-28 08:20 GMT
  • பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 9-ம் தேதி நடைபெறுகிறது.
  • 4 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை நடைபெற்றது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பானுமதி. இவர் சமீபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த ஊராட்சியில் ஆண் வாக்காளர்கள் 921, பெண் வாக்காளர்கள் 931 பேர் என 1852 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கியது. கடைசி நாளான நேற்று 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க தரப்பில் பானுமதி மற்றும் உமா ஆகிய இருவரும், தி.மு.க தரப்பில் சுசீலா மற்றும் நீலாவதி ஆகிய இருவர் என 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்த தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலராக கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, தேர்தல் பணி மேற்பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலாளர் பிரவீன் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை 30ஆம் தேதி திரும்ப பெறலாம். அதனைத் தொடர்ந்து போட்டி இருப்பின் இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடைபெறுகிறது.

Tags:    

Similar News