பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா
- விழா நாட்களில் தினமும் அம்மன் வீதி உலா நடந்தது.
- தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து வழிபட்டனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந்தேதி முதல் காப்பு கட்டுதலும், 19-ந்தேதி 2-ம் காப்பு கட்டுதலும் நடந்தது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா இன்று நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பாடைக்காவடி எடுத்து வழிபட்டனர். இதுதவிர அலகுகாவடி, விலாவுக்காவடி. பால்காவடி, அங்கபிரதஷ்ணம் என பல காவடிகள் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.