உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி.

பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு எம்மதமும் சம்மதம் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Published On 2023-09-25 09:02 GMT   |   Update On 2023-09-25 09:02 GMT
  • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
  • ஓவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள், அறிக்கைகள் அனைத்தையும் சமூகவலைதளங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்று கீதாஜீவன் கூறினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

உடனடி பதிலடி

தமிழக முதல்-அமைச்சரின் திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தையும் வெளி உலகத்திற்கு எடுத்து சொல்லும் தகவல் தொழில்நுட்பத்துறையின் பணி மிகவும் மகத்தானது. ஓவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள், அறிக்கைகள் அனைத்தையும் சமூகவலைதளங்களில் தெரியப்படுத்த வேண்டும்.

பா.ஜ.க.வினர் பல்வேறு பழைய தகவல்களையும், நடைபெறாத சம்பவங்களையும் நமது திட்டங்களுக்கும், கட்சிக்கும் எதிராக பதிவு செய்து வருகின்றனர். அதற்கு உடனடியாக நாமும் பதிலடி கொடுக்கும் வகையில் நமது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும்.

எந்த மதத்தையும் குறைத்து மதிப்பிடும் கட்சி தி.மு.க. கிடையாது. எல்லா மதத்தையும் மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு எம்மதமும் சம்மதம். ஓன்றே குலம் ஓருவனே தேவன் என்ற வழியில் பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும் போது, ஓவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரிடம் சென்று சேரும் வகையில் முதல்-அமைச்சரின் திட்டங்களை, செயல்பாடுகளை, தி.மு.க.வின் வரலாறுகளை கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் பட்சத்தில் 75 ஆயிரம் வாக்குகளை நாம் பெற்றால் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம். அதற்கு உங்களுடைய பங்கு அவசியம் என்று கேட்டுக்கொண்டார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணாதேவி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் வைதேகி, ஜெயசீலி, சரண்யா, சுப்புலட்சுமி, விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி பகுதி அமைப்பாளர்கள் மார்க்கிஸ்ட்ராபட், சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News