உள்ளூர் செய்திகள்

கோவையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு

Published On 2023-03-03 09:27 GMT   |   Update On 2023-03-03 09:27 GMT
  • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது.
  • குற்றவாளிகள் சிலர் மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

கோவை,

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி, மோதல், பாலியல் தொந்தரவு போன்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு கோவை மாநகர் மற்றும் புறநகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது. இதில் சில குற்ற வழக்குகளில் கைதான நபர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் சிலர் மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜரா காமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகரில் 200-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களைப் பிடிக்க 'ஆபரேஷன் வாரண்ட்' என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்து தமிழக டி.ஜி.பி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை நகரில் மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் மேற்பா ர்வையிலும் கோவை மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மேற்பார்வை யிலும் பிடிவாரண்ட் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு போலீஸ் நிலையத்துக்கு 2 போலீசார் வீதம் மாநகர் புறநகரில் சுமார் 100 தனிப்படை போலீசார் பிடிவாரண்ட் குற்றவாளிகளை தேடும் பணியை இன்று முதல் தொடங்ககி உள்ளனர்.

முதல் கட்டமாக கோவை கோனியம்மன் கோவில் விழாவிற்கு வந்திருந்த 10 பிடிவாரண்ட் குற்றவாளிகள் போலீசில் சிக்கினார். ஒரு வார காலத்திற்குள் அனைத்து தலைமறைவு குற்றவா ளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி பல்வேறு குற்றவாளிகளில் இதுவரை சிக்காத நபர்கள், பல்வேறு பகுதிகளில் குற்றம் செய்துவிட்டு கோவையில் தஞ்சம் அடைந்துள்ள நபர்கள், பண மோசடி மற்றும் பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags:    

Similar News