உள்ளூர் செய்திகள்
சிப்காட்டுக்கு எதிர்ப்பு:விவசாயிகள் 47-வது நாளாக போராட்டம்
- நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- 47-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர். ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
சூளகிரி,
சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதி விளை நில பகுதிகளில் 6-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்காக பல்வேறு ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய உபகரணங்களுடன் வீடுகளில் கருப்பு கொடி பறக்க விட்டு 47-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர். ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கண்களை கருப்பு துணியை கட்டி கொண்டு ஆர்பாட்டம் செய்துவருகின்றனர்.