உள்ளூர் செய்திகள்
கூடலூரில் தமிழ்ச்சங்க அலுவலகம் திறப்பு
- தொழில் அதிபா் பால்வண்ணன் திறந்துவைத்தாா்
- நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஊட்டி,
கூடலூா் பழைய நீதிமன்ற சாலையில் நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்க அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தொழில் அதிபா் பால்வண்ணன் திறந்துவைத்தாா். நிா்வாகி பாக்கியநாதன் குத்துவிளக்கேற்றி அரங்கை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத் தலைவா் மணிவண்ணன் தலைமை தாங்கினார். புளியம்பாறை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா், மணிவாசகம், சக்திவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
துணைத் தலைவா் ஆனந்தராஜ், சட்ட ஆலோசகா் கிருஷ்ணகுமாா், ராயல் மருத்துவமனை தலைவா் விவேக், நிா்வாக இயக்குநா் பிரகாஷ், ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா். துணைச் செயலாளா் கலைச்செல்வன் வரவேற்றாா். இணைச் செயலாளா் கணேசன் நன்றி கூறினாா்.