தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதிக்கொண்ட காட்சி.
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு:தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மோதல்:
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர் திறந்து வைத்தார். அந்த பகுதியில் கிணறு மற்றும் குளம் இருப்பதால் தண்ணீர் மாசுபடும் என தெரிவித்து. அந்த இடத்தில் நெ ல்கொள்முதல் நிலையம் அமைக்க அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூபாலன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அங்கு வந்த அதிகாரியுடன் பூபாலன் இந்த பகுதியில் நெல் கொள்முதல் திறக்க கூடாதுஎதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தி.மு.க.வினரும் பூபாலன் தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிஒருவருக்கொருவர் திடீரென கட்டி புரண்டு தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது. அங்கிருந்த பொதுமக்கள்மோதிக்கொண்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.பிரச்சனை முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஒரு தரப்பினர் நெல் கொள் முதல் நிலையத்தை தி.மு.க. அவைத் தலைவர் திறந்து வைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.