உள்ளூர் செய்திகள்

ஊட்டி எச்.எம்.டி. சாலையை சீரமைக்காவிட்டால் மரம் நடும் போராட்டம்

Published On 2022-09-10 15:20 IST   |   Update On 2022-09-10 15:20:00 IST
  • நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலை அல்லல்படுத்த வைக்கிறது.
  • மரம் நடும் போரட்டத்தை பா.ஜ.க. கையில் எடுக்கும் என மாவட்ட தலைவர் கூறினார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி எச்.எம்.டி. சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் தினந்தோறும் பல வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.

அவசர தேவைகளுக்கு செல்லும் பல வாகனங்கள் சேற்றில் சிக்கி போராடி தான் செல்ல வேண்டி உள்ளது. இத்தனைக்கும் இது ஒரு முக்கியமான சாலை ஆகும்.

ரோஜா பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் நகருக்குள் வராமல் பஸ் நிலைய பகுதிகளில் இருந்து குன்னூர் சாலை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலை இப்படி அனைவரையும் அல்லல் படுத்த வைக்கிறது

இந்த சாலையை பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு சாலை பணி செய்யும் ஒப்பந்ததாரரிடம் பேசினர். அவர் இன்றே சாலை சீரமைப்பு பணியை தொடங்கி நாளைக்குள் முடித்து விடுவதாக கூறினார்

உடனடியாக இந்த சாலை சீரமைக்காவிட்டால் சாலையில் மரம் நடும் போரட்டத்தை பா.ஜ.க. கையில் எடுக்கும் என மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கூறினார்

மாவட்ட செயலாளர் அருண், நகர துணை தலைவர் சுதாகர், நகர செயலாளர்கள் சுரேஷ்குமார், ராஜேந்திரன், நகர துணை தலைவர் அரிகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் பிரேம்யோகன், இளைஞர் அணி விளையாட்டு துறை தலைவர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News