கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்கள் பணம் திருடும் காட்சி.
ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியில் இருசக்கரவாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடிய மர்ம நபர்கள் -சி.சி.டி.வி. பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை
- ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு தனது ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார்.
- பணத்தை திருடி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது.
ஓசூர்,
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் நகர பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அதே பகுதியை சேர்ந்த சஞ்சுகுமார் என்பவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு தனது ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார்.
வங்கி முன்பு தனது வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த பணம் காணாமல் போனது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் ஆனேக்கல் போலீசில் புகார் செய்தார. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆம்னி காரில் அந்த பகுதிக்கு வந்த 4 பேர், பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை திருடி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதிவை வைத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.