உள்ளூர் செய்திகள்

மே தினத்தை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில்பரமத்திவேலூரில் மே தின ஊர்வலம்

Published On 2023-05-02 12:53 IST   |   Update On 2023-05-02 12:53:00 IST
  • மே தினத்தை முன்னிட்டு மின் பணியாளர்கள், மின் மோட்டார் மின் பணியாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் மே தின தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
  • அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மே தினத்தை முன்னிட்டு மின் பணியாளர்கள், மின் மோட்டார் மின் பணியாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் மே தின தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

பரமத்திவேலூர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வர்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்ற தொழிலாளர்கள் சங்க கூட்டத்திற்கு வேலூர் தி.மு.க. நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.

நாமக்கல் மாவட்ட தொழிற்சங்க தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் தொழி லாளர்களின் நல வாரி யத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கட்டுமான தொழி லாளர் சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News