உள்ளூர் செய்திகள்

அரியகோஷ்டி ஊராட்சியில் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம்

Published On 2022-06-26 13:05 IST   |   Update On 2022-06-26 13:05:00 IST
  • கிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • மேல்சிகிச்சைக்காக 4 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர்.

கடலூர்: 

கடலூர் கிருஷ்ணா மருத்துவ மனைகளின் குழும இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீ கிருஷ்ணா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் பரங்கிப்பேட்டை ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சி துணை சுகாதார நிலையத்தில் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் முகாம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் ஹேமாவதி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், முதுநிலை மருந்தாளுநர்கள் கலந்துகொண்டு 126 நபர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் மேல்சிகிச்சைக்காக 4 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் துணை தலைவர் சுதா சுப்பிரமணியன், செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் ஞானஸ்கந்தன், கிராம சுகாதார செவிலியர் கிருபா லட்சுமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News