உள்ளூர் செய்திகள்

வாகனத்தின் சாவியை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் அந்தோணிசாமியிடம் வழங்கினார்.

ஐ.வி.டி.பி நிறுவனம் சார்பில் தொழுநோய் நிவாரணப் பணிகளுக்கு ரூ.14.2 லட்சம் மதிப்பிலான வாகனம்

Published On 2022-08-11 15:15 IST   |   Update On 2022-08-11 15:15:00 IST
  • சாவியை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் அந்தோணி சாமியிடம் வழங்கினார்.
  • ஐ.வி.டி.பி நிறுவனம், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் தொழுநோய் நிவாரண பணிகளுக்காக இதுவரை ரூ.50 லட்சம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி,

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தொழுநோய் கண்டறிதல், தொழுநோய் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் தடுப்புப் பணிகளில் மும்பையை சார்ந்த அலர்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் தொழுநோய் நிவாரண பணிகளை திறம்பட செய்ய ஏதுவாக ரூ.14.2 லட்சம் மதிப்பிலான வாகனத்தை ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கியது.

அந்த வாகனத்தின் சாவியை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் அந்தோணி சாமியிடம் வழங்கினார்.

வாகனம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஐ.வி.டி.பி நிர்வாகிகள் ஜோஸ்வா சைமன் மற்றும் நந்தினி எஸ்தர், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐ.வி.டி.பி நிறுவனம், அலர்ட் இந்தியா நிறுவனத்தின் தொழுநோய் நிவாரண பணிகளுக்காக இதுவரை ரூ.50 லட்சம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News