உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் அருகே மொபட் மீது வேன் மோதி முதியவர் சாவு
- ரெங்கசாமி தனது மொபட்டில் ராஜ பாளையம்-கோவில்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- மொபட் மீது வேன் மோதியதில் ரெங்கசாமி படுகாயம் அடைந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பிள்ளையார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி(வயது 50). இவர் நேற்று தனது மொபட்டில் ராஜ பாளையம்-கோவில்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக தனியார் மில் வேன் ஒன்று வந்தது. அதனை கரிவலம்வந்த நல்லூர் அருகே செண்பகாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் ஒட்டிச்சென்றார். எதிர்பாராத விதமாக மொபட் மீது வேன் மோதியதில் படுகாயம் அடைந்த ரெங்கசாமியை அப்பகுதியினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு செல்லும் வழியிலேயே ரெங்கசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரிவலம்வந்த நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமூர்த்தியிடம் விசாரித்து வருகின்றனர்.