உள்ளூர் செய்திகள்
- சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் கிடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த மூதாட்டி யார் என விசாரணை.
நாகப்பட்டினம்:
திருமருகல் அடுத்த அருள்மொழிதேவன் அக்ரகாரம் பிரிவு சாலை அருகே அரசலாற்று படுகையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.