உள்ளூர் செய்திகள்

பேரூர் பேரூராட்சியில் பழைய பொருட்கள் கண்காட்சி

Published On 2023-06-09 14:28 IST   |   Update On 2023-06-09 14:28:00 IST
  • பேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆர்.ஆர்.ஆர். என்ற‌ புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.‌
  • பேரூராட்சி செயல் அலுவலர் கே.மணிகண்டனின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

வடவள்ளி,

கோவை பேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆர்.ஆர்.ஆர். என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேரூர் பேரூராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்களை சேகரித்து அதனை கொண்டு வந்து கண்காட்சிக்கு அடுக்கி வைத்து மக்கள் அதனை பார்க்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் மூலம் தூய்மை பணியாளர்கள் மூலமாக ஆடைகள், புத்தகங்கள், உரங்கள், காலணிகள் போன்ற–வற்றை சேகரித்து பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வருகின்றன.

அங்கு தனித்தனியாக ஒவ்வொரு பொருட்களுக்கும் பெட்டிகள் அமைத்து வைக்கப்பட்டு உள்ளன. அதில் பொருட்களை அடுக்கி வைத்து உள்ளனர். பேரூராட்சி அலுவலத்திற்கு வரும் பொதுமக்கள் அங்கு உள்ள பொருட்களை ஆர்வமுடன் பார்ப்பதுடன், தங்களுக்கு தேவையானவற்றை எடுத்து செல்கின்றனர். பேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கே.மணிகண்டனின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags:    

Similar News