உள்ளூர் செய்திகள்
அன்னூரில் கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது
- 2 கிலோ கஞ்சாைவ போலீசார் பறிமுதல் செய்தனர்
- கோவையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது
மேட்டுப்பாளையம்,
அன்னூர் அருகே கீழ் கதவுக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது கீழ் கதவுக்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற வாலிபரிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் 2 கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பிடிபட்டவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உமேஷ்சந்திரபார்க் (வயது29) என்பதும், கோவையில் விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து உமேஷ்சந்திரபார்க் என்பவரை கஞ்சா விற்றதாக, அன்னூர் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.