உள்ளூர் செய்திகள்
கோவையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் போராட்டம்
- பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துவதாக சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
- பொங்கல் போனஸ் தொகை உயர்த்தி வழங்க வேண்டும்
கோவை,
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் காலித்தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அகவிலைப்படியுடன் சட்டபூர்வ பென்ஷன் ரூ. 7850 வழங்க வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துவதாக சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பொங்கல் போனஸ் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.