உள்ளூர் செய்திகள்
தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட விழா
- கல்லூரி செயலர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டம் தொடர்பான நன்மைகள் குறித்து பேசினார்
- நடப்பு ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்டம் கூறித்து ராஜ ராஜேஸ்வரி எடுத்துரைத்தார்.
வள்ளியூர்:
நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் குறித்த அறிமுக விழா நடைபெற்றது.
கல்லூரி செயலர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டம் தொடர்பான நன்மைகள் குறித்து பேசினார் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ், கல்லூரி முதல்வர் ராஜன் ஆகியோர் நாடார் நாட்டு நலப்பணி திட்டத்தின் நோக்கம், மாணவர்களின் பங்கு குறித்து பேசினர்.
பொருளாதாரத்துறை தலைவர் ராஜேந்திரன் ரவிக்குமார் தனது கடந்த கால அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். நடப்பு ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்டம் கூறித்து ராஜ ராஜேஸ்வரி எடுத்துரைத்தார். தாவரவியல் துறை பேராசிரியர் ஹரி கிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 35 மற்றும் 37-ஐ சேர்ந்த திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.