பெரியநாயக்கன்பாளையம் அருகே வடமாநில வாலிபர் தற்கொலை
- 5 நாட்களாக இளம்பெண் பங்கஜ்குமார் ராமுடன் பேசாமல் இருந்து வந்தார்.
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ்குமார் ராம்(வயது25).
இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் இடிகரை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உறவினர்களுடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் பீகாரில் இருக்கும்போது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த 5 நாட்களாக இளம்பெண் பங்கஜ்குமார் ராமுடன் பேசாமல் இருந்து வந்தார்.
இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அறையில் இருந்த பங்கஜ்குமார் ராம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட பங்கஜ்குமார் ராமின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பெரிய பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.