உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் 1000 கையெழுத்துக்கள் பெற்ற 90 வயது மூதாட்டியை சுவாமி ராமானந்த மகராஜ் பாராட்டிய காட்சி.

சேலத்தில் அடுத்த ஆண்டு திருமணிமுத்தாறு புஷ்கரம்

Published On 2023-04-21 08:00 GMT   |   Update On 2023-04-21 08:00 GMT
  • திருமணிமுத்தாறு தூய்மை காக்க மக்கள் இயக்கம் சார்பில் நீராதாரம் பேண ஒரு லட்சம் கையெழுத்து பெறும் திருப்பணி நடைபெற்று வருகிறது.
  • சேலம் செர்ரி ரோடு மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் உள்ள சாந்தாஸ்ரமத்தில் நடைபெற்றது.

சேலம்:

சேலம் திருமணிமுத்தாறு தூய்மை காக்க மக்கள் இயக்கம் சார்பில் நீராதாரம் பேண ஒரு லட்சம் கையெழுத்து பெறும் திருப்பணி நடைபெற்று வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இது தொடர்பான ஆலோ

சனை கூட்டம் மற்றும் 1000 கையெழுத்து வாங்கி யவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சேலம் செர்ரி ரோடு மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் உள்ள சாந்தாஸ்ரமத்தில் நடைபெற்றது.

சேலம் திருமணிமுத்தாறு தூய்மை காக்க மக்கள் இயக்க தலைவர் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்முருகேசபூபதி, தெய்வீக தமிழ் சங்க தலைவர் பா.ராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சிக்கு அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறு வனர் சுவாமி ராமானந்த மகராஜ், பொதுச்செயலாளர் ஆத்மானந்த மகராஜ், ராசி புரம் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் கே.குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ சனாதன வித்யா பீடம் மற்ரும் திருவெம்பாவை பெருவிழா கழக செயலாளர் என்.சந்திரசேகர் வரவேற்றார்.

கவுரவிப்பு

தெய்வீக தமிழ் சங்க நிறுவனர் வீரபாரதி செம்முனி, கன்னங்குறிச்சி விவசாயிகள் சங்கம் கவிஞர் ஆறுமுகம் ஆகியோர் ஒருங்கி ணைத்தனர். நிகழ்ச்சியில் 1000 கையெழுத்துக்கள் பெற்ற வர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் பேசுகையில், திரு மணிமுத்தாறின் புனிதத்தை காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கான கையெழுத்து இயக்கத்தில் 90வயதை தாண்டிய பெண்மணி ஆர்வத்தோடு பங்கேற்று சிறப்பாக பணிசெய்வது ஆச்சரியமாக உள்ளது. மக்களிடம் தர்மசிந்தனை அழிந்து விடவில்லை என்றார்.

அடுத்த ஆண்டு புஷ்கரம்

கூட்டத்தில் சேலத்தில் திருமணிமுத்தாறு பாதுகாக்க ஒருலட்சம் கையெழுத்து விழிப்புணர்வு இயக்கத்தை தீவிரப்படுத்துவது, 2024-ம் ஆண்டு திருமணிமுத்தாறு புஷ்கரம் அம்மன் சிலை ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் பொருளாளர் ஸ்ரீதர் நரசிம்மன் நன்றி கூறினார்.  

Tags:    

Similar News