உள்ளூர் செய்திகள்

கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வாகை சந்திரசேகர் வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன்.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்க புதிய இணையதளம் - வாகை சந்திரசேகர் தகவல்

Published On 2022-10-31 09:47 GMT   |   Update On 2022-10-31 09:47 GMT
  • தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைகள் நல வாரியம் சார்பில் கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
  • இணையதளம் தொடங்கி அதன் மூலம் நாட்டுப்புற கலைகள் மற்றும் இயல், இசை, நாடகக் கலைஞர்களை நல வாரியத்தில் இணைக்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது.

நெல்லை:

தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைகள் நல வாரியம் சார்பில் கலைஞர் களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ. 1 லட்சம் நிதிஉதவி

இதில் சிறப்பு அழைப்பாளராக வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு நெல்லை மண்டலத்தில் உள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களை சேர்ந்த கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

மறைந்த கலைஞர்களின் குடும்ப பராமரிப்புச் செலவுகளுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார். மேலும் வாரியத்தில் உள்ள கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்க ரூ. 25 ஆயிரம் என 127 பேருக்கு ரூ. 14½ லட்சம் நிதி உதவி வழங்கினார்.

7 லட்சம் கலைஞர்கள்

பின்னர் வாகை சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நெல்லை மண்டலத்தில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மண்டலங்களைச் சார்ந்த நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இயல், இசை, நாடக மன்றத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகள் சார்ந்த 7 லட்சம் கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. இதனை எளிமையாக்கும் வகையில் விரைவில் இணையதளம் தொடங்கி அதன் மூலம் நாட்டுப்புற கலைகள் மற்றும் இயல், இசை, நாடகக் கலைஞர்களை நல வாரியத்தில் இணைக்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது.

அடுத்த ஒரு வருடத்தில் இரண்டு லட்சம் கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News