உள்ளூர் செய்திகள்

தெருவில் புதிய விளக்குகள் இயங்கும் காட்சி.


தூத்துக்குடி மாநகராட்சி 36-வது வார்டில் புதிய விளக்குகள்-மேயருக்கு பொதுமக்கள் பாராட்டு

Published On 2022-08-18 14:31 IST   |   Update On 2022-08-18 14:33:00 IST
  • தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
  • 5 புதிய மின் விளக்குகளை அமைத்து அமைத்துக்கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தரமான உயிரி உரம் உற்பத்தி தொடர்பான மாநகராட்சிக்கான அடையாளச் சின்னம் வெளியிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநகரப் பகுதிகளில் விளம்பர பதாகைகள் அமைப்பது குறித்தான ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக பேனர் அமைக்கும் நிறுவனங்கள்,திருமண மண்டப உரிமையாளர்கள், அலுவலர்கள் கலந்து கொள்ளும் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

இதில் மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுஇடங்களில் விபத்து ஏற்படும் வகையிலும் உள்ள விளம்பர பேனர்கள், பதாகைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் மாநகரின் 36-வது வார்டு போல்டன்புரம் பகுதியில் பல வருடங்களாக இருள் சூழ்ந்து காணப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகிலும், சுப்பையா வித்யாலயம் பள்ளி மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் பாதைகளிலும் 5 புதிய மின் விளக்குகளை அமைத்து அமைத்துக்கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News