உள்ளூர் செய்திகள்

தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிட பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.


தென்காசி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிட பூமி பூஜை

Published On 2022-08-09 14:12 IST   |   Update On 2022-08-09 14:12:00 IST
  • தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் அழகு சுந்தரத்திடம் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
  • பழனி நாடார் எம்.எல்.ஏ. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் அழகு சுந்தரத்திடம் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். அவர் இந்த கோரிக்கையை தி.மு.க.மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் மனுவாக அளித்திருந்தார்.

மாவட்டச் செயலாளர், பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்ததையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கு நேற்று பூமி பூஜை நடந்தது.

விழாவிற்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் உதயகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பழனி நாடார் எம்.எல்.ஏ. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், துணை தலைவர் சண்முகசுந்தரம், வட்டார கல்வி அலுவலர்கள் இளமுருகன், சண்முகசுந்தரபாண்டியன், தி.மு.க. பேரூர் செயலாளர் சுந்தரபாண்டியபுரம் பண்டாரம், சேர்மன் காளியம்மாள் செல்வகுமார், மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி வல்லம் செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்த், ஆனந்தராஜ், ஆவின் ஆறுமுகம், கிளைச் செயலாளர் செல்வக்குமார், அரிச்சந்திரன், தங்கராஜ், வேல்ராஜ், கருப்பசாமி, வேதம்புதூர் பிச்சையா, துரைப்பாண்டி, செல்வம், கதிரவன், அழகுதுரை, குட்டி ராஜன், அரசு ஒப்பந்ததாரர் குத்தாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News