உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மரக்கன்று நட்ட காட்சி. அருகில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி உள்ளனர்.


தூத்துக்குடியில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு

Published On 2022-11-24 15:21 IST   |   Update On 2022-11-24 15:21:00 IST
  • நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
  • போலீஸ் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊரக உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, புதியம்புத்தூர், தட்டப்பாறை, சிப்காட் மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என சுற்றிலும் பார்வையிட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டார்.நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News