உள்ளூர் செய்திகள்

பள்ளி தாளாளர் திருமாறன் தலைமையில் ரெயில் நிலையத்தில் மாணவி அபிநயாவிற்கு மலர் கிரீடம் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற நெல்லை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு

Published On 2023-05-05 09:19 GMT   |   Update On 2023-05-05 09:19 GMT
  • 5 -வது ஆசிய இளையோர் தடகளப் போட்டி தாஷ்கண்ட் மாகாணத்தில் நடைபெற்றது
  • மாணவி அபிநயா 4X100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.

நெல்லை:

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தில் நடைபெற்ற 5 -வது ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி அபிநயா 11.82 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் மற்றும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர் திருமாறன், முதல்வர் முருக வேள், பள்ளி ஒருங்கிணை ப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் சேது, நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலர் லெட்சுமணன், நீச்சல் பயிற்றுநர் கர்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News