உள்ளூர் செய்திகள்

வேப்பனபள்ளி அருகே 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி

Published On 2022-11-21 15:12 IST   |   Update On 2022-11-21 15:12:00 IST
  • மூன்று மாதங்களாக 9 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது.
  • யாரும் வனப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஏக்கல்நத்தம் வனப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 9 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது அப்பகுதியில் ஊருக்கள் புகுந்து விவ சாய நிலங்களையும், பயிர்க ளையும் நாசம் செய்து வந்தது.

இந்த நிலையில் காட்டு யானைகளை வனத்துறையினர் ஏக்கல்நத்தம் வனப்பகுதிக்கு விரட்டி இருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் 9 காட்டு யானைகளும் தமிழக எல்லை வனப்பகுதியான எப்ரி பகுதியில் முகா மிட்டுள்ளது. மீண்டும் 9 காட்டு யானைகள் எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகளும் பீதி அடைந்துள்ளனர். காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வேறு வனப்பகுதி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் எப்ரி வனப்பகு தியில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், ஆடு, மாடுகள் மேய்ப்பவர்கள் யாரும் வனப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News