உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Update: 2022-06-30 09:57 GMT
  • 2 பேரும் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறிய பொட்டலமாக விற்று வந்துள்ளனர்.
  • தினமும் காலை-மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சிறிய பொட்டலமாக கஞ்சாவை பார்சல் செய்து பள்ளி-கல்லூரிகள் முன்பு நின்று மாணவர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.
  • ஏற்கனவே தகவல் தெரிந்த போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடி வந்த நிலையில் தான் தற்போது வாகன சோதனையில் சிக்கி உள்ளனர்.

திருவட்டார், ஜூன்.30-

திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் வேர்கிளம்பி பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக இரு சக்கர வாகனம் வந்தது. அந்த வாகனத்தை போலீ சார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தை சோதனை செய்த போது 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்ப ட்டது.

உடனே வாகனத்தில் வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவட்டார் அருகே நாராயணத்து விளை பகுதியை சேர்ந்த ஆல்பி என்ற ஆல்வின் சாமுவேல் (வயது29), முள விளை வியனூர் பகுதியை சேர்ந்த பிரதீஷ் (28) என தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் தங்கள் செல்போனில் வாட்ஸ்ஆப் குரூப் தொடங்கி அந்த பகுதியில் உள்ள பள்ளி-கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து அவர்களிடம் நைசாக பேசி கஞ்சா விற்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

2 பேரும் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறிய பொட்டலமாக விற்று வந்துள்ளனர். இவர்களது பண பரிவரித்தனைகள் அனைத்தும் ஜி. பே. மூலம் நடைபெற்றுள்ளது.

தினமும் காலை-மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சிறிய பொட்டலமாக கஞ்சாவை பார்சல் செய்து பள்ளி-கல்லூரிகள் முன்பு நின்று மாணவர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.

இது பற்றி ஏற்கனவே தகவல் தெரிந்த போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடி வந்த நிலையில் தான் தற்போது வாகன சோதனையில் சிக்கி உள்ளனர். கைதானஆல்பி என்ற ஆல்வின் சாமுவேல் தனியார் நிறுவனத்தில் லோன் வசூலிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.

பிரதீஷ், தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

Tags:    

Similar News