உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே திருமணமான 17 நாளில் புதுப்பெண் மாயம்
- கள்ளக்குறிச்சி செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீத்தாராமன் மகன் நாராயணன் (வயது 24) விவசாயி, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (20) என்பவருக்கும் கடந்த 7-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் நாராயணன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.