உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
- டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
- ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீஸ் சரகம் சின்னகான பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 21). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பவர்க்ரிட் அருகே சென்றபோது டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பாலமுரளியை அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.