பணியை கே.பி.முனுசாமி தொடங்கி வைத்த காட்சி.
ராயக்கோட்டை அருகே ரூ.1.11 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி
- 3 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1.11 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி.
- கே.பி.முனுசாமி எம். எல்.ஏ. பூமி பூஜை தொடங்கி வைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கணம்பட்டி யிலிருந்து கடம்பல்பட்டி வரை 3 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1.11 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை அ.தி.மு.க. மாநில துணை பொதுசெயலாளரும், வேப்பனஅள்ளி சட்டமன்ற உறுப்பினரும்மான கே.பி.முனுசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் முருகன், வேப்பனஅள்ளிஒன்றிய செயலாளர் சைலேஷ்கி ருஷ்ணன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், முன்னால் ஒன்றிய செயலாளர்கிருஷ்ணன், அவைத்தலைவர் மாரிமுத்து, பொருளாளர் மகேஷ்குமார், துணை செயலாளர் முனுசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர்கள் புருசப்பன், துர்வாசன், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் நாகராஜ், எஸ்.எம்.மணி, ரஜினி குமார், ராஜன்ராவ், முன்னால் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.