ராயக்கோட்டை அருகே இருத்தரப்பினர் மோதலில் தொழிலாளி சாவு; விவசாயி அதிரடி கைது
- முனிராஜ் மற்றும் அவரது தந்தை தூர்வாசன் உள்பட மேலும் சிலர் தாக்கியதில், சந்திரன் கீழே சரிந்து விழுந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து முனிராஜை கைது செய்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த தொட்டிநாய்கன ஹள்ளியை சேர்ந்தவர் சந்திரன் (வயது41). கூலித்தொழிலாளி. இவரது 17 வயது மகனின் நண்பருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி முனிராஜ் (44), என்பவரது 14 வயது மகன் மொபைல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.
தன் நண்பனுக்கு எவ்வாறு தவறான குறுஞ்செய்தி அனுப்பலாம் என கூறி சந்திரனின் மகன் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு கடந்த, 22-ந்தேதி இரவு முனிராஜ் வீட்டிற்கு சென்று அவரிடம் கேட்டார்.
அப்போது, தனது மகன் அப்படித்தான் குருஞ்செய்தி அனுப்புவான் என, முனிராஜ், அவரது தந்தை தூர்வாசன் ஆகியோர் கூறியுள்ளனர்.
மேலும் சந்திரன் மகன் மற்றும் அவரது நண்பர்களை பிடித்து வைத்து கொண்டு வீட்டிலிருந்து பெற்றோரை வருமாறு முனிராஜ் கூறியுள்ளார்.
இதனால் சந்திரன், தாய் நல்லம்மாள், மாமா கோவிந்தன் ஆகியோர் புதுப்பட்டி கிராமம் சென்றனர். அங்கு இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், முனிராஜ் மற்றும் அவரது தந்தை தூர்வாசன் உள்பட மேலும் சிலர் தாக்கியதில், சந்திரன் கீழே சரிந்து விழுந்தார்.
உடனே அவரை மீட்டு சிகிச்ைசக்காக ராயக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சந்திரன் உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முனிராைஜ கைது செய்தனர். மேலும் தூர்வாசன் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.